காலநிலை மாற்ற ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்: 52 பேர் கைது
In இங்கிலாந்து April 16, 2019 7:51 am GMT 0 Comments 2048 by : Varshini
காலநிலை மாற்றம் தொடர்பாக, மத்திய லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காலநிலை மாற்ற ஆர்வலர்கள் சுமார் ஆயிரம் பேர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர்.
வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர்கள், ஷெல் எனப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் தலைமையத்தை சுற்றிவளைத்தனர். அங்குள்ள கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனையடுத்து 52 பேரை கைதுசெய்து பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர். 5 பேர் மீது, ஷெல் நிறுவனத்தை தாக்கிய குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொது ஒழுங்குமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஏனையோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்ததால், என்18 வீதியூடான போக்குவரத்தை நேற்றிரவு நிறுத்தியதாக லண்டன் போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மாற்ற சட்டங்களே பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால், பிரெக்ஸிற்றின் பின்னர் அது செல்லுபடியற்றதாக மாறும் நிலையில், காலநிலை மாற்றம் ஆபத்தை நோக்கி செல்லுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொ
-
டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட
-
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக