காஷ்மீரில் இந்த வருடத்துக்கான முதல் பனிமழைப் பொழிவு ஆரம்பம்
In இந்தியா December 12, 2020 10:00 am GMT 0 Comments 1294 by : Yuganthini

இந்த வருடத்துக்கான குளிர்காலத்தில் முதல் பனிப்பொழிவு காஷ்மீரில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்டது.
காஷ்மீரில் பனிப்பொழிவு ஆரம்பித்து உள்ளமையினால், சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிப் போயிருந்த தங்கள் வாழ்வாதாரம், மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முதல் முறையாக காஷ்மீர் வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளும், பனிமழையைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளதாகவும் பல சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.