கிரேக்கத்தில் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் ஜனவரி 18ஆம் திகதி வரை நீடிப்பு

கிரேக்கம் தனது கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை ஜனவரி 18ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து துணை சிவில் பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் ஹர்தாலியாஸ் கூறுகையில், ‘நாங்கள் தொடர்ந்து உருவாகி வரும் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு தகவமைப்பு தேவை, ஆனால் முக்கியமாக பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை’ என கூறினார்.
ஆரம்ப பாடசாலைகள், மழலையர் பாடசாலைமற்றும் தினப்பராமரிப்பு நிலையங்கள் மட்டுமே கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் கொவிட்-19 நடவடிக்கைகளின் கீழ் ஜனவரி 11ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்.
கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நாட்டின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முதலில் ஜனவரி 11ஆம் திகதி நீக்கப்பட இருந்தன.
மேலும் குறிப்பாக ஜனவரி 18 வரை சில்லறை கடைகள் மற்றும் சிகையலங்கார நிபுணர், புத்தகக் கடைகள் கிரேக்கம் முழுவதும் மூடப்படும்
அனைத்து வேட்டை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்து மத விழாக்களும் வழிபாட்டாளர்கள் இல்லாமல் நடத்தப்படும், அதே நேரத்தில் இறுதிச் சடங்குகள் அதிகபட்சம் ஒன்பது நபர்களுடன் (நெருங்கிய உறவினர்கள்) நடைபெறும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.