கிறிஸ்டோஃப் புயல்: வடக்கு- மத்திய இங்கிலாந்துக்கு அம்பர் மழை எச்சரிக்கை!
In இங்கிலாந்து January 19, 2021 8:33 am GMT 0 Comments 1812 by : Anojkiyan

‘கிறிஸ்டோஃப்’ புயல் நெருங்கும்போது வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு அம்பர் மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் மற்றும் ஹம்பர், வட மேற்கு, கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் கிழக்கில் உள்ள மக்களுக்கு, கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை அலுவலகம் கூறியுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை முதல் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 48 மிமீ (2.75 இன்) வரை மழை 48 மணி நேரத்திற்குள் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமை முழுவதும் நீடிக்கும் மழை, அதிக நிலத்தில் பனி உருகுவதோடு இணைந்தால், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேகமாக ஓடும் அல்லது ஆழமான வெள்ள நீர் காரணமாக ‘உயிருக்கு ஆபத்து’ இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.