கிறிஸ் லின் மற்றும் ரஸல் ருத்ரதாண்டவம் – 233 ஓட்டங்கள் மும்பைக்கு வெற்றி இலக்கு
In கிாிக்கட் April 28, 2019 4:47 pm GMT 0 Comments 2254 by : Jeyachandran Vithushan

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் லின் மற்றும் ரஸலின் அதிரடியாக துடுப்பாட்டத்தின் காரணமாக கொல்கத்தா அணி 233 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 47 ஆவது லீக் போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி வீரர்களின் அடுத்தடுத்து அதிரடியான வான வேடிக்கை காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து அதிரடியாக 232 ஓட்டங்களை குவித்தது.
கொல்கத்தா அணி சார்பில் கிறிஸ் லின் 51 ஓட்டங்களையும் சுப்மன் கில் 76 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, ஆக்ரோஷமாக விளையாடிய ரஸல் 80 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் ராகல் சாஹர் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இந்த சீசனில் 232 என்ற ஓட்ட எண்ணிக்கையே அதிகூடிய ஓட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்