கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு- தீவிர சிகிச்சை பிரிவில் மூவர்
In இலங்கை February 14, 2021 8:54 am GMT 0 Comments 1534 by : Yuganthini
கிளிநொச்சி- உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை, வாள் வெட்டில் முடிந்துள்ளதுதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.