கிளிநொச்சியில் கனமழை: தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
In இலங்கை December 28, 2020 3:16 am GMT 0 Comments 1473 by : Yuganthini
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையினால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை சில குளங்கள் வான்பாய்ந்து வருகிறது. அதாவது, கனகாம்பிகைகுளம் 7 அங்குலம் வான்பாய்ந்து வருவதுடன் பிரமந்தனாறு குளம் 3 அங்குலம் வான் பாய்கின்றது.
இவ்வாறு பிரமந்தனாறு குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதால், பிரமந்தனாறு- மயில்வாகனபுரம் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கனகாம்பிகைக்குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, கனகாம்பிகைக்குளம், பன்னங்கண்டி, பரந்தன் பகுதிகளிலுள்ள மக்களையும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.