கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் சாரதி உயிரிழப்பு!

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், ஆறுமுகம் தட்சயன் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இதுகுறித்த விசாரணையை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.