கிளிநொச்சியில் யானை உயிரிழப்பு: ஒருவர் கைது
In இலங்கை December 28, 2020 4:38 am GMT 0 Comments 1358 by : Yuganthini
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த இந்த காட்டு யானை, வயலினை அழித்துள்ளதுடன் அப்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் உயிரிழந்த யானை, தந்தத்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸாரும் வன ஜீவராசிகள் திணைக்களமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.