கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!
In இலங்கை January 19, 2021 8:48 am GMT 0 Comments 1308 by : Yuganthini

கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று வட.மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இரணைதீவு பகுதியில் தொழில் செய்வதற்கான அனுமதி மற்றும் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவித்து மக்களினால் போராட்டமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இப்பிரச்சினையை ஆராயும் கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் கடற்படை அதிகாரிகள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.