கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
In இலங்கை December 11, 2020 6:41 am GMT 0 Comments 1769 by : Yuganthini
கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில், பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர், புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.