கிளி.யில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு
In இலங்கை January 15, 2021 4:59 am GMT 0 Comments 1345 by : Yuganthini
அனைத்து மதங்களிற்குள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அனைத்து மதங்களிற்குள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி செபமாலை செபஜீவன் தலைமையில் குறித்த பொங்கல் நிகழ்வு உதயநகர் கிழக்கு முதியோர் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி செபமாலை செபஜீவன், மெளளவி M.S யமீன், கிராம சேவையாளர் த.குணசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதியோர் சங்கத்தின் 45 உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டாடப்பட்ட குறித்த பொங்கல் நிகழ்வு, சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.