கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இலங்கை November 20, 2020 2:47 am GMT 0 Comments 1636 by : Yuganthini

மட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு- ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த 74வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு நேற்று (வியாழக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்தவரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் இருந்து வரும்போதே சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.