கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரிப்பு
In இலங்கை December 15, 2020 10:47 am GMT 0 Comments 1353 by : Dhackshala

கடந்த 12 மணித்தியாலத்தில் புதிதாக 21 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது.
காரைதீவில் ஒருவரும் நிந்தவூரில் ஒருவரும் சாய்ந்தமருதில் ஒருவரும் அட்டாளைச்சேனையில் ஒருவரும் பொத்துவிலில் 12 பேரும் சம்மாந்துறையில் 3 பேரும் இறக்காமத்தில் 2 பேருமாக 21 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர் .
கிழக்கு மாகாணத்தில் 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 98 பேருக்கும் திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 20 பேருக்கும் கல்முனை சுகாதார பிரிவில் 452 பேருக்குமாக 588 போருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 21 ஆயிரத்து 629 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா அச்சம் காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகளும் மாளிகைக்காடு கிழக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.