கிழக்கில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவு
In Uncategorized December 22, 2020 9:07 am GMT 0 Comments 1428 by : Yuganthini

கிழக்கில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூன்றாவது நபர் மரணமடைந்துள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் அழகைய லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் மரணமடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 778கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் அழகையா லதாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.