கிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
In இலங்கை November 29, 2020 4:28 am GMT 0 Comments 1504 by : Dhackshala

கிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும் அம்பாறை பிராந்தியத்தில் 08 தொற்றாளர்களும் கல்முனை பிராந்தியத்தில் 65 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஏற்பட்ட கொத்தணி காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 37 பேரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொருவரும் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இறக்காமம் பகுதியை சேர்ந்த ஒருவரும் அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரித்தார்.
அத்துடன் அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆலையடி வேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்தொற்றின் பாதிப்பு காணப்படுவதால், இப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.