குடிமகளாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் : வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண்!

குடிமகளாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என அப்போலா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி புதிய கட்சியாகக் களமிறங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா குடிமகளாக தான் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் ‘எனது வாழ்நாளில் இந்திய குடிமகளாக இது மோசமான நாளாகும். நான் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இது மிகப் பெரிய குற்றம்.
யார் இங்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள். இதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.
“I feel cheated as a citizen. Does my vote not count?” Former CII chief Shobhana Kamineni, daughter of Apollo hospitals chief Dr Pratap Reddy, lets fly at the deletion of her name—her disenfranchisement—from the voters’ list in Hyderabad. #GeneralElections2019 pic.twitter.com/yoRMmxCmzk
— churumuri (@churumuri) April 11, 2019
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.