குடியரசு தினம் : ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்!
In இந்தியா January 26, 2021 5:06 am GMT 0 Comments 1375 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இதன்போது எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் தேசியக் கொடியுடன் வானில் பறந்தது.
இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து இராணுவத்தின் உயரிய விருதுகளை வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். பங்களாதேஷ் முப்படை வீரர்களின் அணிவகுப்பு இந்திய குடியரசு தினவிழாவில் நடைபெறவுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக பங்களாதேஷின் முப்படை இந்த அணிவகுப்பில் கலந்துகொள்கிறது. இதில் 122பேர் அடங்கிய முப்படை வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.