குடும்பச் சட்டத்தில் மாற்றம் – அரசாங்கம்!
In இலங்கை January 12, 2021 6:46 am GMT 0 Comments 1582 by : Jeyachandran Vithushan

விவாகரத்து, திருமண முடிவுறுத்தல், விவாகரத்து கொடுப்பனவு, பிள்ளைகள் பொறுப்பு மற்றும் சொத்துப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் குடும்பச் சட்டத்தை மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திருமணம், விவாகரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைகள் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க திருமண பதிவு கட்டளைச் சட்டத்திலும், குடியியல் வழக்கு சட்டக்கோவையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போதைய கட்டளைக்கு ஏற்ப கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி குடும்பச் சட்டம் தொடர்பாக பிற நாடுகளில் நிலவும் சட்ட நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்ய, நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் நிபுணர் குழுவின் உதவியுடன் பிற நாடுகளில் நிலவும் சட்ட நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.