குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக சர்வமத பிரார்த்தனை
In Uncategorized May 2, 2019 1:33 pm GMT 0 Comments 1899 by : Litharsan
தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் சர்வமதப் பிரார்த்தனை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டியும் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று மாலை இந்த சர்வமதப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் குறித்த சர்வமத பிரார்த்தனை இடம் பெற்றது.
இதன்போது சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இந்நாட்டில் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்படவும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஒரு நிமிடம் மௌன அஞ்சலியின் பின்னர் தீபம் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர