குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா
In இலங்கை April 26, 2019 3:38 am GMT 0 Comments 2058 by : adminsrilanka

தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போது, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிருஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தினர் அவர்களின் மத வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும், அதற்கான பாதுகாப்பை அகில இலங்கை ஜமியத்துல் உலமா வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கிருஸ்தவ தேவாலயங்களில் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாவிடன் மசூதி அல்லது கிருஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலமையில் பெண்கள் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.