குமார் பொன்னம்பலத்தின் 21ஆவது நினைவுதினம் வடக்கில் அனுஷ்டிப்பு
In இலங்கை January 6, 2021 4:39 am GMT 0 Comments 1367 by : Dhackshala

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் வடக்கு, கிழக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
அதன்படி இந்த நினைவு தினம் யாழ். கொக்குவிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினம் வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று மாலை 5 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா முக்கியஸ்தர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அன்னாரின் உருவபடத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு, அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர் மயூரசர்மா, நகரசபை உறுப்பினர் ஜாணுயன், பிரதேசசபை உறுப்பினர் சஞ்சுதன், அந்தணர் ஒன்றியத்தின் பிரபாகரக் குருக்கள், சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.