குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்
In ஆசிரியர் தெரிவு January 19, 2021 12:57 pm GMT 0 Comments 1495 by : Jeyachandran Vithushan
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் இது வெளிப்படையான இன அழிப்பு என குற்றம் சாட்டிய அவர் சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும் குறித்த பகுதியில் அகழ்வாராச்சி நடைபெறவுள்ளது என்றால் அங்கு செல்பவர்கள் ஏன் செங்கற்களை கொண்டு செல்ல விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் ஜனாதிபதி கோட்டாவின் அம்பாறை உரையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.