குறடால் தாக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு – தந்தை கைது!
In இலங்கை April 9, 2019 11:10 am GMT 0 Comments 2697 by : Dhackshala

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் குறடால் தாக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
கணவனால் மனைவி மீது வீசப்பட்ட குறடு, தவறுதலாக குழந்தை மீது வீழ்ந்ததில் குறித்த குழந்தை படுகாயமடைந்தது.
தாக்குதலுக்குள்ளான குழந்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்தது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபனது வீட்டில் கடந்த 4ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழந்தையின் தந்தை தப்பிச் சென்றார்.
இந்நிலையில் தலைமறைவாகிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இர
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத
-
அரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புத
-
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்
-
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார
-
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன என
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்கள
-
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்ந