குற்றங்களை குறைக்க தேசத்துரோக சட்டத்தை கடுமையாக்குவோம்: ராஜ்நாத் சிங்
In இந்தியா April 13, 2019 3:08 am GMT 0 Comments 2321 by : Yuganthini

எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் குற்றங்களை குறைப்பதற்கு தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திதாம் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராஜ்நாத் சிங் இதனை குறிப்பிட்டார்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு, தனியானதொரு பிரதமரை நியமிக்க வேண்டுமென சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவைகளை திரும்பப் பெறும் நிலைமை ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த 2007ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடம் இருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மிஷன் சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதென ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம