குளுகுளு நாவல்பழ மில்க்ஷேக்
May 5, 2019 3:13 am GMT

தேவையான பொருட்கள் :
நாவல்பழக்கூழ் – அரை கப்
குளிர்ந்த பால் – தேவையான அளவு (காய்ச்சி ஆறவைத்தது)
தூளாக்கிய ஐஸ்கட்டிகள் – சிறிதளவு
விருப்பமான ஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்
சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன்
கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும்.
இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.
-
உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 250 கிரா...
-
சாமை கருப்பு உளுந்து கஞ்சி
தேவையான பொருள்கள் : சாமை அரிசி – 1 கப் கருப...