கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படாது – பினராயி விஜயன்
In இந்தியா February 16, 2021 11:20 am GMT 0 Comments 1130 by : Krushnamoorthy Dushanthini

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படாது என அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபிறகு குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் தொடங்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ‘கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்
குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சிஏஏ சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு கேரள மாநிலத்தில்இ எப்படி அமல்படுத்தாமல் இருக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் நான் உறுதியாகச் சொல்கிறேன் கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.