கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் பிணையில் விடுதலை
In இலங்கை January 9, 2021 10:00 am GMT 0 Comments 1406 by : Jeyachandran Vithushan

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் பிணையில் செல்ல யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இரு மாணவர்களும் இன்று யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்த குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.
இருப்பினும் மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.