கொங்கோவில் எபோலா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

கொங்கோ குடியரசில் எபோலா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொங்கோவில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் எபோலா தொற்று பரவி வருகின்ற நிலையில், கொங்கோ வரலாற்றில் இரண்டாவது தடவையாக பதிவாகியுள்ள அதிகூடிய உயிரிழப்பு வீதமாக இது காணப்படுகிறது.
எபோலா தொற்று நாட்டின் கிழக்கு பகுதிகளில் பரவி வருகின்றது. இந்நிலையில், நாட்டின் வன்முறை காரணமாக தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மருத்துவ நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் மீது 119 தாக்குதல்கள் அரங்கேற்ற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதுவரை சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் எபோலா தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ