கொங்கோவில் மிருகத்தனமான தாக்குதல்களில் 25 பொதுமக்கள் உயிரிழப்பு!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில், ஏ.டி.எஃப் போராளிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) ஏடிஎஃப் போராளிகளை இராணுவம் துரத்திச் சென்றபோது, பென்னி மாகாணத்தில் உள்ள ஒரு கிராம வயற்பகுதியில் இந்த உடல்களை இராணுவத்தினர் கண்டுள்ளனர்.
1990களில் இருந்து உகாண்டா கிளர்ச்சிக் குழுவாக இப்பகுதியில் செயற்பட்டு வரும் ஏ.டி.எஃப், பரந்த நாட்டின் கிழக்கு மாகாணங்களை பாதிக்கும் 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும்.
ஒரு வருடம் முன்பு, கொங்கோ இராணுவம், ஏ.டி.எஃப்-க்கு எதிராக ஒரு பெரிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கியது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, குழு தனது தளங்களை கைவிட்டு, சிறிய, அதிக நடமாடும் குழுக்களாகப் பிரிந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஒக்டோபர் 2014ஆம் ஆண்டு முதல் பெனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் ஏ.டி.எஃப், உகாண்டாவில் இஸ்லாமிய வேரூன்றிய கிளர்ச்சிக் குழுவாக உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசவேனியை எதிர்க்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.