கொட்டகலையில் தோட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டி வைப்பு
In இலங்கை December 14, 2020 8:16 am GMT 0 Comments 1376 by : Dhackshala
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சபை உப தலைவர், உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில் முதல் நடவடிக்கையாக இந்த ஓய்வு அறை தோட்டப்பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
மேலும், இது போன்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து பெருந் தோட்ட பகுதிகளில் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.