கொமர்ஷல் வங்கியின் ‘கெதரடதேகி 3’ பரிசுத் திட்டம் அறிமுகம்
In வணிகம் May 2, 2019 11:04 am GMT 0 Comments 3135 by : adminsrilanka

2019ஆம் ஆண்டின் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கொமர்ஷல் வங்கி ´கெதரடதேகி 3´ பரிசுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் ஒரு கார் 3 ஸ்கூட்டர்கள் 30 வகையான வீட்டுப் பாவனைப் பொருள்கள் உள்ளிட்ட 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான பரிசுகளை வழங்கியுள்ளது.
இதனை வங்கியின் 109 வெளிநாட்டு பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் பெறவுள்ளனர்.
அந்தவகையில் இன்னும் 9 மாதகாலத்தில் கொமர்ஷல் வங்கி மூலம் வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் 25 பரிசுப் பொதிகளை வெல்ல முடியும்.
பிரதான பரிசான Hyundai Grand i 10 காருக்கு மேலதிகமாக புத்தம் புதிய மூன்று ஸ்கூட்டர்கள், 10 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், 10 சலவை இயந்திரங்கள், 10 சமையலறை தொகுதிகள் என்பனவும் இறுதிப் பரிசளிப்பின் போது வழங்கப்படவுள்ளன.
ஓவ்வொரு காலாண்டிலும் வழங்கப்படவுள்ள 75 பரிசுப் பொதிகளின் பெறுமதி ரூபாய் 1,125,000 ஆகும்.
இவை குறிப்பிட்ட மூன்று மாதகாலத்தில் வங்கியின் ஊடாக வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் இந்த பரிசுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.