கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய அரசு ஆலோசனை!
In இந்தியா January 19, 2021 5:34 am GMT 0 Comments 1352 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நாடுகள் இந்திய அரசை அணுகியுள்ளன. அண்டை நாடுகளுக்கு முதலில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மத்திய சுகாதாரம், வா்த்தகம், வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள், மருந்து தயாரிப்பு துறை பிரதநிதிகள் உள்ளிட்டோா் திங்கட்கிழமை காணொலி வழியாக ஆலோசனை மேற்கொண்டனா் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் உள்நாட்டில் தடுப்பூசி தேவை, உற்பத்தித் திறன் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு எடுக்க சில காலம் ஆகும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவஸ்தவா சமீபத்தில் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்த ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.