மன்னாரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் பூந்தோட்டத்தில் தகனம்!
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகர சபையால் பராமரிக்கப்பட்டுவரும் மின் மயானத்தில் இன்று(வியாழக்கிழமை) தகனம் செய்யப்பட்டது.
இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் பிரசன்னத்துடன் இன்று நண்பகல் 12 மணியளவில் அவரது சடலம் வவுனியாவில் எரியூட்டப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.