கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்கள் அடக்கம்- இறுதி முடிவை நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும்:சுதர்ஷினி
In இலங்கை February 11, 2021 6:45 am GMT 0 Comments 1231 by : Dhackshala
கொரோனா வைரஸால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என விடயத்துக்குப் பொறுப்பான ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் இது தொடர்பான விளக்கத்தை வழங்குமாறு, நாடளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளேயிடம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் வழங்கிய அவர், இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவிடமே இருப்பதாகவும் பிரதமர் நேற்று தெரிவித்த யோசனை, நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.