அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சர் வெளியிட்ட கருத்து
In ஆசிரியர் தெரிவு November 16, 2020 2:31 am GMT 0 Comments 1726 by : Yuganthini
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குவதா அல்லது இல்லையா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு இவ்வாரம் உறுதியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களை புதைக்க அனுமதி வழங்கப்பட்டதாக சமீபத்தித்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அரசாங்கத்தை சேர்ந்த சிலர், இவ்விடயத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என கூறினர். அதேபோன்று அரசாங்கத்தை சேர்ந்த மற்றுமொரு தரப்பினர் அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளனர்.
இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளதாவது, “கொரோனா மரணங்களை புதைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப குழுவுடன் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.
எனவே, அதனுடன் தொடர்புள்ள தொழில்நுட்ப குழுவின் சில அறிக்கைகள், எனக்கு கிடைக்க வேண்டியுள்ளது. அந்த பரிந்துரைகள் கிடைத்ததும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்க இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.