கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு சுவீடன் நாடாளுமன்றம் அனுமதி
In ஐரோப்பா January 10, 2021 5:55 am GMT 0 Comments 1345 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று காலத்தில் அரசாங்கத்திற்கு புதிய மற்றும் தற்காலிக அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்திற்கு சுவீடனின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய சட்டம், நாட்டில் உள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை முதன்முறையாக மூடவும் அதிகாரிகளுக்கு அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நெருக்கடியின் போது ஐரோப்பிய நடன சுவீடன் வேறுபட்ட மூலோபாயத்தைப் பின்பற்றிய போதும் அண்மையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த மாதம், சுவீடன் முதல் தடவையாக பொது போக்குவரத்தை பயன்படுத்தும் தனது நாட்டு மக்களை முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அல்லது உள்நாட்டு பயணத் தடையை விதிக்க அரசாங்கத்தை அனுமதிக்காத புதிய சட்டத்தை எவ்வாறு, எப்போது பயன்படுத்த விரும்புகிறது என்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.