கொரோனாவைத் தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் – வடகொரிய தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவு
In உலகம் November 19, 2020 2:59 am GMT 0 Comments 1452 by : Dhackshala

வடகொரியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
எனவே நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் ஒருவருக்குகூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறி வந்தது.
ஆனால் கடந்த ஜூலை மாத இறுதியில் வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அந்த நகரத்துக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு கொரோனா அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை என உறுதியாக தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்குமாறு அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.