கொரோனாவை யாரும் அலட்சியமாகக் கருத வேண்டாம் – சரத்குமார்
In சினிமா December 14, 2020 11:13 am GMT 0 Comments 1284 by : Krushnamoorthy Dushanthini

கொரோனாவை யாரும் அலட்சியமாகக் கருத வேண்டாம் என திரும்பியுள்ள நடிகர் சரத் குமார் கூறியுள்ளார்.
அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையல், ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “டிசம்பர் 8 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் 6 நாட்களுக்குப் பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறேன்.
மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும்தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது. மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்துதலில் நான் இருக்க வேண்டும்.
கொரோனாவை அலட்சியமாகக் கருதாமல் அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.