கொரோனா அச்சம்- புளியங்குளம் பாடசாலையும் மூடப்பட்டது!

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட புளியங்குளம் இந்துக் கல்லூரி நாளை புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
புளியங்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களுடன் தொடர்புடையோருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கோரப்பட்டதற்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஐந்து பாடசாலைகள் ஏற்கனவே மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி நான்காம் திகதிவரை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மூன்றாம் தவணைக்காக நாடுமுழுவதும் பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.