கொரோனா அச்சம் – மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை January 17, 2021 4:44 am GMT 0 Comments 1385 by : Dhackshala

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த 288 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
விஷேட விமானம் மூலம் குறித்த 288 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாடு திரும்பிய அவர்கள் அனைவரிடமும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.