கொரோனா அச்சம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலைவாய்ப்பு பணியகத்தில் பணிபுரியும் ஏனைய 50 சாரதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112880500 எனும் 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்வதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.