கொரோனா அச்சுறுத்தல்: கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பூட்டு
In அம்பாறை December 26, 2020 6:58 am GMT 0 Comments 1514 by : Yuganthini

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை- கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார்.
குறித்த பணிமனையில் கடமையாற்றும் சாரதி, இரண்டு மருத்துவ மாதுக்கள் உள்ளடங்கலாக மூவருக்கு இன்று (சனிக்கிழமை) காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவேதான், அம்பாறை- கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வைத்தியர் ஜி.சுகுணன் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பரிசோதனை மீண்டும் செய்யும் வரை, பணிமனையின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.