கொரோனா உயிரிழப்புக்களை அரசாங்கம் மறைக்கின்றது- ஹரின் பெர்ணான்டோ
In இலங்கை November 10, 2020 10:53 am GMT 0 Comments 1724 by : Yuganthini

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மறைக்கின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஹரின் பெர்ணான்டோ மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு.
அந்த இறப்புக்கு, கொரோனா வைரஸ்தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் கவனமின்மை நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.