கொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்தவொரு சிறு பக்கவிளைவும் ஏற்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், இது மருத்துவத் துறைக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் 166 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்றும் சென்னையில் தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசித் திட்டம் தொய்வின்றி முழு வீச்சில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.