கொரோனா தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி
In இலங்கை December 25, 2020 8:22 am GMT 0 Comments 1655 by : Dhackshala
கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்த தடுப்பூசிகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாக, அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும் இடங்கள் மற்றும் ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.