கொரோனா தடுப்பூசி- அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை கோரியது பைசர்!

அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம், தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இன்று அனுமதி கோரியுள்ளது.
இந்நிலையில், இந்த அனுமதி கிடைத்தவுடன் அடுத்த மாதத் தொடக்கத்தில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 95வீதம் பயனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் ஐந்து கோடி மருந்துகளைத் தயாரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு, சினோபார்ம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்திப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நான்கு கொவிட்-19 தடுப்பூசிகள் மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
அவற்றில், மூன்று தடுப்பூசிகள் ஏற்கெனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.