கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்
In இலங்கை January 12, 2021 10:29 am GMT 0 Comments 1389 by : Dhackshala

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை 4000 இல் இருந்து 5000 வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊசி ஏற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கல், தடுப்பூசியை பெற்றுக்கொள்வோரை பதிவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய ஏதேனும் ஒருவகை அல்லது சில தடுப்பூசி வகைகளை விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.