கொரோனா தடுப்பூசி – கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
In இங்கிலாந்து December 9, 2020 5:26 am GMT 0 Comments 1837 by : Benitlas

தற்போதைய சூழலில் பைஸர் நிறுவன தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் முதல் நாடாக பிரித்தானியாவில் நேற்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன.
90 வயதான மார்கரெட் கீனன் என்ற முதியவர் பிரித்தானியாவில் பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து, முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போருக்கும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், என்.எச்.எஸ் ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை கர்ப்பிணிகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், அது தாயாருக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், தற்போதைய சூழலில் பைஸர் நிறுவன தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கின்றனர்.
மட்டுமின்றி, கர்ப்பிணிகள் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பெண்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தாயாகும் திட்டத்தையும் தள்ளிப்போட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தாய்ப்பால் வழங்கும் தாயர்மார்கள், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோலவே, 16 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களுக்கும் பைஸர் நிறுவன தடுப்பூசி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு கண்காணிக்க போதுமான ஆட்கள் கொண்ட சிறார்களுக்கும் பைஸர் நிறுவன தடுப்பூசியை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.