கொரோனா தடுப்பூசி குறித்த மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
In இந்தியா January 5, 2021 11:53 am GMT 0 Comments 1481 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி ஜனவரி 13 ஆம் திகதி முதல் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி முதலில் முன்கள பணியாளர்களுக்கும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்தும் வேலைகளை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டத்திற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.